தமிழ்நாடு சிறு நீர்மின்னாற்றல் உற்பத்திக் கொள்கை – 2024
September 10 , 2024 314 days 395 0
முதன்முறையாக சிறிய நீர் மின் திட்டங்கள் குறித்த புதிய கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் லிமிடெட் (TNGECL) நிறுவனமானது இந்தப் புதிய கொள்கையினை வரைவு செய்துள்ளது.
இது சுயப் பயன்பாடு அல்லது மூன்றாம் தரப்பு விற்பனைக்காக மின்சாரம் தயாரிக்க தனியார் துறை சார்ந்த உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.
100 கிலோவாட் முதல் 10 மெகாவாட் வரையிலான சிறிய நீர் மின்னாற்றல் திட்டங்கள் (ஒவ்வொன்றும் 5 மெகாவாட் அலகு அளவு கொண்டவை) உள்ளூர் எரிசக்தி உற்பத்தி அளவை மேம்படுத்தச் செய்வதற்கும் கிராமப்புற மின்மயமாக்கலுக்கு பெரும் ஆதரவு அளிப்பதற்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகின்றன.