TNPSC Thervupettagam

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கொள்கை 2026

January 16 , 2026 6 days 65 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சேமிப்புக் கிடங்குக் கொள்கையை வெளியிட்டார்.
  • இந்தக் கொள்கையானது நவீன கிடங்கு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும், தமிழ்நாட்டில் விநியோகச் சங்கிலி மற்றும் தளவாடங்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் கொள்கையானது கிடங்குத் துறையில் சந்தைப் பங்கேற்பாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் மேம்பாட்டாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகைகளை வழங்குகிறது.
  • அந்தக் கிடங்குகள் தமிழ்நாட்டில் அமைந்திருக்க வேண்டும் என்பதோடு மேலும் ஊக்கத் தொகையைப் பெற மேம்பாட்டாளர் அல்லது சேவை வழங்குநர்கள் இந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
  • கொள்கை காலத்தில் செயல்படத் தொடங்கும் புதிய கிடங்குகள் மற்றும் அந்தக் கால கட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஏற்கனவே உள்ள கிடங்குகளின் விரிவாக்கங்களுக்கான ஊக்கத்தொகைக்கு தகுதியானவையாகும்.
  • இப்புதிய கிடங்குகள் ஆனது பசுமை முன்னெடுப்பிற்கான செலவில், 25% வரையிலான பசுமை ஊக்கத்தொகையை அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரை பெறலாம்.
  • இந்தக் கொள்கை C வகை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கிடங்கு மேம்பாட்டிற்கான பயிற்சி மானியங்கள் மற்றும் சிறப்பு ஊக்கத் தொகைகளையும் வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்