TNPSC Thervupettagam

தமிழ்நாடு டிஜிபி பதவிக்காலம்

April 8 , 2026 4 days 93 0
  • இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டின் புதிய காவல்துறைத் தலைவரை நியமித்ததைத் தொடர்ந்து, அவரது பதவிக்காலம் குறித்த விவாதம் எழுந்துள்ளது.
  • சந்தீப் ராய் ரத்தோர், காவல்துறை இயக்குநர் (DGP) மற்றும் காவல்துறைப் படைத் தலைவராக (HoPF) நியமிக்கப்பட்டார்.
  • இந்த நியமன உத்தரவில் அவர் எவ்வளவு காலம் இந்தப் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடப்படவில்லை.
  • முன்னதாக பிரகாஷ் சிங் வழக்கில், டிஜிபி பதவிக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பதவிக் காலம் இருக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
  • ஆனால், இந்த விதி ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலம் செய்யப் படும் நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
  • தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, அவரைத் தொடரச் செய்வதா அல்லது மாற்றுவதா என்பதை முடிவு செய்யலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்