தமிழ்நாடு தினம் / மாநில உருவாக்க தினம் – நவம்பர் 01
November 3 , 2020 1743 days 537 0
தமிழ்நாடு மாநிலமானது தனது இரண்டாவது மாநில உருவாக்கத் தினமான “தமிழ்நாடு தினத்தை” இந்த ஆண்டு நவம்பர் 01 அன்று அனுசரித்தது.
தமிழ்நாடு மாநிலமானது 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி அப்போதைய மதராஸ் மாகாணத்திலிருந்து 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று உருவாக்கப் பட்டது.
இறுதியில் மதராஸ் மாநிலமானது 1969 ஆம் ஆண்டில் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப் பட்டது.
1936 ஆம் ஆண்டில் மொழி அடிப்படையில் உருவாக்கப் பட்ட முதலாவது மாநிலம் ஒரிசா (ஒடிசா) ஆகும்.
அதன் பிறகு, 1953 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசம் மொழியியல் அடிப்படையில் உருவாக்கப் பட்டது.