தமிழ்நாடு மாநிலமானது, 1956ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மதராஸ் மாநிலம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
1967ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று, மதராஸ் மாநிலச் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அப்போதைய தமிழக முதல்வர் C.N. அண்ணாதுரை தலைமையிலான அரசு, இந்த மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றக் கோரிஇந்த முடிவை மேற்கொண்டது.
1967 ஆம் ஆண்டில், மதராஸ் மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து குரல் எழுப்பி வாக்கெடுப்பில் ஒருமித்த வாக்கினை அளித்தன.
சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, 1956ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதியன்று விருதுநகரில் அவர் உயிரிழந்தயடுத்து இந்த கோரிக்கை எழுப்பப் பட்டது.
2015 ஆம் ஆண்டு விருதுநகரில் சங்கரலிங்கனாருக்காக உருவாக்கப்பட்ட ஒரு நினைவுச் சின்னத்தை தமிழக அரசு எழுப்பியது.
1969ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதியன்று மாநிலமானது தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2019 ஆம் ஆண்டில், அப்போதைய தமிழக மாநில முதல்வர் எடப்பாடி K. பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மாநிலம் உருவானதைக் குறிக்கும் வகையில் நவம்பர் 01 ஆம் தேதியை தமிழ்நாடு மாநில உருவாக்க தினமாக அறிவித்தது.
இருப்பினும், 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், அப்போதைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மாநிலத்தின் மறு பெயரிடுதலைக் குறிக்கும் வகையில், 2022ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 18 ஆம் தேதியானது தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தது.