தமிழ்நாடு தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கினை 2031 ஆம் ஆண்டிற்குள் 50% ஆக உயர்த்துவதற்கான 'தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2031'-ஐ அறிவித்துள்ளது.
முக்கிய நகரப் பெருவழிகளுக்கு முன்னுரிமை அளித்து 20,000 மின்சார வாகன (EV) மின்னேற்று நிலையங்களை அமைப்பது இத்திட்டத்தில் அடங்கும்.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, தமிழ்நாடு 5.50 லட்சம் பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களையும் 2,425 மின்னேற்று நிலையங்களையும் கொண்டிருந்தது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பை ஆதரிப்பதற்காக ஆறு நிலையங்கள் மூலம் 1,000 மெகாவாட்-மணி (MWh) மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (BESS) மாநிலம் நிறுவும்.
திருத்தியமைக்கப்பட்ட விநியோகத் துறைத் திட்டத்தின் (RDSS) கீழ், திறன் அளவிகள் உட்பட ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளை 10% ஆகக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்காக சுமார் ₹8,929.86 கோடி ஒப்புதல் அளிக்கப் பட்டு உள்ளது.