தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் பல்வேறு தொழில் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்தில், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் சார்பில் ₹500 கோடி முதலீட்டில் மின்கலத் தொகுப்புத் தயாரிப்பு அலகுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
கரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மொத்தம் ₹119 கோடி செலவில் மினி டைடல் பூங்காக்கள் கட்டப்பட உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் ₹100 கோடி முதலீட்டில் மின் மற்றும் மின்னணு இணைப்பான்கள் தயாரிப்பு ஆலையை நிறுவ Hirose Electric Group உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாட்டில் பசுமை எரிசக்தி மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்துடன் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.