TNPSC Thervupettagam

தமிழ்நாடு நலத்திட்டத் தகவல்கள்

February 20 , 2026 26 days 152 0

  • பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பாதுகாக்கவும், 18 வயது வரை பள்ளிப் படிப்பை கைவிடாமல் தொடரவும் 'அன்பு கரங்கள்' திட்டம் மாதாந்திர நிதி உதவி ரூ.2,000 வழங்குகிறது.
  • முதியோர் எதிர்கொள்ளும் சிரமங்களைப் போக்க, மூத்தக் குடிமக்களுக்காக 25 இடங்களில் 'அன்புச் சோலை' எனப்படும் பகல்நேரப் பராமரிப்பு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
  • மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமிக்க தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், 1994 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 ஆகியவற்றில் தேவையான திருத்தங்கள் கொண்டு வரப் பட்டுள்ளன.
  • கலைஞர் நூற்றாண்டு நூலகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரையில் நிறுவப்பட்டது.
  • கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள் கட்டமைப்பை மேம்படுத்த 'பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.
  • தேசிய சராசரியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்கல்வி சேர்க்கை விகிதம் 47 சதவீதத்துடன் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
  • பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்கள் தங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப உயர்கல்வி படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் வழிகாட்டுவதற்காக 'கல்லூரிக் கனவு' திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் 'வெற்றி நிச்சயம்' திட்டம் செயல்படுத்தப் படுகிறது என்பதோடு இது இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து அவர்களை வேலைவாய்ப்புக்குத் தயார்படுத்துகிறது.
  • மக்களின் நீண்டகாலக் குறைகளிலிருந்து எழும் பத்து முன்னுரிமை கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம் தொடங்கப் பட்டு உள்ளது.
  • 'டாக்டர் கலைஞர் விளையாட்டுப் பொருட்கள் விநியோகத் திட்டத்தின்' கீழ், 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு 16,798 விளையாட்டுப் பொருட்கள் விநியோகிக்கப் பட்டு உள்ளன.
  • மாநில அளவில், 'முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டு விழா - இது நம்ம ஆட்டம் 2026' போட்டிகளை நடத்துவதற்காக ரூ.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டி, தமிழ்நாட்டைக் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டம் தொடங்கப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டு வரை, 15 மாவட்டங்களில் 32,525 ஏக்கர் பரப்பளவில் 24 சிப்காட் தொழிற் பேட்டைகள் செயல்பட்டு வந்தன.
  • இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, 12 கூடுதல் மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன என்பதோடு மேலும் தற்போது 49,468 ஏக்கர் பரப்பளவில் 54 தொழில் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.
  • சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பளவில் ‘தமிழ்நாடு அறிவு நகரம்’ மற்றும் ‘உலகளாவிய நகரம்’ ஆகியவற்றை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
  • ஸ்ரீபெரும்புதூரில், சுமார் 18,720 படுக்கைகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரியதான தொழிலாளர் விடுதி கட்டப்பட்டுள்ளது.
  • திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் ஓசூரில் புதிய TIDEL பூங்காக்கள் நிறுவப் பட்டு இருக்கின்றன.
  • விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர் மற்றும் காரைக்குடியில் TIDEL நியோ மினி ஐடி பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.
  • மேலும், நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மினி ஐடி பூங்காக்கள் அமைக்கப் பட்டு வருகின்றன.
  • 'தமிழ்நாடு குறைக்கடத்தி திட்டம் 2030' என்பது ரூ.500 கோடி மதிப்பீட்டில் செயல் படுத்தப் படும் ஒரு மூலோபாய ஐந்தாண்டுத் திட்டமாகும்.
  • கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் துணை உற்பத்தியில் முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை' விரைவில் வெளியிடப்பட உள்ளது.
  • கப்பல் கட்டும் தொழிலுக்கான உலகளாவிய மையமாக தமிழ்நாடு உருவெடுக்க உள்ளது.
  • V.O. சிதம்பரனார் (VOC) துறைமுக ஆணையத்துடன் இணைந்து SIPCOT, தூத்துக்குடியில் ஒரு புதிய கப்பல் கட்டும் குழுவை நிறுவுகிறது.
  • கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்க நகைப் பூங்காவிற்கான முதல் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • 25 வகை கைவினைஞர்களின் மேம்பாட்டிற்கு நிதி உதவி, திறன் பயிற்சி மற்றும் விரிவான உள்கட்டமைப்பு ஆதரவை வழங்கும் நோக்கத்துடன் 'கலைஞர் கைவினை திட்டம்' தொடங்கப்பட்டது.
  • தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் கண்ணாடி இழை கம்பி வடம் மூலம் இணைப்பதன் மூலம் அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை வழங்க, தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் (TANFINET) மூலம் பணிகள் செயல்படுத்தப் படுகின்றன.
  • கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலைப் பகுதியில், பொது-தனியார் கூட்டு முயற்சியாக ரூ.5,320 கோடி முதலீட்டில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு நீர்மின் திட்டத்தை நிறுவுவதற்கான முதற்கட்ட ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன.
  • மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மேம்படுத்துவதற்காக என்று ‘புதிய ஒருங்கிணைந்தப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கை’ விரைவில் வெளியிடப்பட உள்ளது.
  • நெய்தல் மறுசீரமைப்பு இயக்கத்தின்’ கீழ், 3,733 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்புநில மறு சீரமைப்பை அரசு மேற்கொண்டு வருகிறது.
  • அயோத்தி தாஸ் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்விடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்டு வருகின்றன.
  • பழங்குடியினர் வாழ்விடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ‘தொல்குடி’ திட்டமும் ரூ.1,000 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.
  • முதுகலை அல்லது ஆராய்ச்சி படிப்புகளைத் தொடரும் மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைக்க ‘அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர் கல்வி உதவித் தொகை திட்டம்’ தொடங்கப் பட்டுள்ளது.
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (CM ARISE) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த நபர்களைத் தொழில்முனைவோராக மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.
  • அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டத்தின்’ கீழ், 4,948 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கு ரூ.420 கோடி மானியங்கள் வழங்கப் பட்டுள்ளன.
  • இந்தியாவில் முதல் முறையாக, சுமார் 1,29,689 துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
  • மாமல்லபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டில், தனியார் துறை முதலீடுகளை நன்கு ஈர்ப்பதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கச் செய்வதற்கும் அரசாங்கமானது ஒரு புதிய ‘சுற்றுலா கொள்கையை’ வெளியிட்டு உள்ளது.
  • சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சென்னை ஒன்’ என்ற மொபைல் செயலி, பல்வகை பயணத் திட்டமிடலுக்கான இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த டிக்கெட் விண்ணப்பமாகும்.
  • அரசாங்கம் பதவியேற்ற உடனேயே முதல்வரின் முகவரி என்ற துறையை நிறுவியது, இதனால் குடிமக்கள் அரசு நிர்வாகத்தை எளிதாக அணுக முடியும்.
  • மக்களுடன் முதல்வர்’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 4,835 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, 23.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது.
  • உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய முயற்சியின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 10,000 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
  • கடன் வழங்குபவர்கள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களின் துன்புறுத்தலில் இருந்து அப்பாவி மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க, தமிழ்நாடு பணக் கடன் வழங்கும் நிறுவனங்கள் (கட்டாய நடவடிக்கைகளைத் தடுக்கும்) சட்டம், 2025 என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டு, அதன் கீழ் ஒரு பயனுள்ள சட்டக் கட்டமைப்பை வழங்க விதிகள் வகுக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்