TNPSC Thervupettagam

தமிழ்நாடு பணியிடப் பாலியல் துன்புறுத்தல் வழக்கு

November 27 , 2026 16 hrs 0 min 30 0
  • பாலியல் துன்புறுத்தல் புகாரை விசாரிப்பதற்காகத் தமிழ்நாடு அரசு உள்ளகப் புகார் குழுவை (ICC) அமைத்துள்ளது.
  • பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 (POSH சட்டம்) கீழ் இக்குழு அமைக்கப்பட்டது.
  • பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதும் தடை செய்வதும் அதற்கான தீர்வு காணும் வழிமுறையை வழங்குவதும் POSH சட்டத்தின் நோக்கமாகும்.
  • 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட பணியிடங்களில் உள்ளகப் புகார் குழு (ICC) அமைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது; 10-க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட பணியிடங்கள் மற்றும் முதலாளிக்கு எதிரான புகார்களை மாவட்ட அளவிலான உள்ளூர் குழு (Local Committee) கையாள்கிறது.
  • உள்ளகப் புகார் குழுவில் ஒரு பெண் தலைமை அதிகாரியும், குறைந்தபட்சம் இரண்டு ஊழியர் உறுப்பினர்களும், ஒரு வெளிப்புற உறுப்பினரும் இடம்பெற வேண்டும்; அதன் உறுப்பினர்களில் குறைந்தது பாதிப் பேர் பெண்களாக இருக்க வேண்டும்.
  • எதிர்காலப் பணியிடப் பாலியல் துன்புறுத்தல் புகார்களுக்கும் உள்ளகப் புகார் குழு இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இவ்வழக்கை விசாரிக்க திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் (SP) சிருஷ்டி சிங்கிற்கும், விசாரணையைக் கண்காணிக்க காவல்துறைத் தலைவர் (நிர்வாகம்) என். காமினிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்