விவசாயிகளுக்கான கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
2025 ஆம் ஆண்டு மே 1 முதல் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்காக முதலமைச்சர் அவர்களால் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.
குறு விவசாயிகளுக்கு ₹50,000 வரையிலான கடன்களுக்கு முழுமையான தள்ளுபடி வழங்கப் படும், அதே சமயம் சிறு விவசாயிகளுக்கு இந்த வரம்பிற்குள் 50% தள்ளுபடி கிடைக்கும்.
₹1 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் பெற்றுள்ள விவசாயிகள் மற்றும் பிற பெரிய விவசாயிகளுக்குத் தலா ₹5,000 தள்ளுபடி வழங்கப்படும்.
சுமார் 14.22 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது என்பதுடன் இதற்காக அரசாங்கத்திற்கு தோராயமாக ₹2,044.46 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.