தமிழ்நாடு புல்வெளி மறுசீரமைப்புத் திட்டத்திற்கான மாதிரிப் பகுதி
February 29 , 2024 523 days 415 0
தமிழ்நாடு மாநில வனத்துறையானது, மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (FCRI) இணைந்து, கோவை மாவட்டத்தில் உள்ள சிறுமுகை வனச்சரகத்தில் மாதிரிப் புல்வெளி மறுசீரமைப்புப் பகுதியினை அமைப்பதற்கான பணிகளைத் துவக்கியுள்ளது.
FCRI குழுவானது, சிறுமுகை பகுதி வனச்சரகத்தின் உலர்-இலையுதிர் வனப்பகுதியான பெத்தி குட்டை என்ற காப்புக் காட்டில் ஒரு ஹெக்டேர் பரப்பிலான நிலத்தை இதற்காக அடையாளம் கண்டுள்ளது.
இது மாதிரிப் புல்வெளி மறுசீரமைப்புத் திட்டமாக மாற்றப்படும்.
இது தமிழக அரசின் மெய்ப்புலம் என்ற திட்டத்திற்கான தமிழ்நாடு பல்லுயிர்ப்பெருக்க வளங்காப்பு மற்றும் பருவநிலை மாற்றங்கள் நடவடிக்கைகளுக்கான ஒரு பசுமைத் திட்டத்திற்கான (TBGPCCR) மாதிரிப் பகுதியாகச் செயல்படும்.