TNPSC Thervupettagam

தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் விண்வெளி வசதிகள்

May 24 , 2026 16 hrs 0 min 31 0
  • இந்தியாவின் தனியார் விண்வெளி உற்பத்தித் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் புதிய பொதுவான தொழில்நுட்ப வசதிகளுக்கு விண்வெளித் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
  • விண்கலம் மற்றும் பயனுறு சுமை அமைப்பு உற்பத்திக்காக அகமதாபாத் அருகே உள்ள கோரஜில் விண்வெளி உற்பத்திப் பூங்கா உருவாக்கப்படும்.
  • குலசேகரப்பட்டினத்தில் வரவிருக்கும் ஏவுதள வளாகத்திற்கு அருகே தூத்துக்குடியில் விண்வெளி வாகனங்கள் தொகுப்பு நிறுவப்படும்.
  • தமிழ்நாட்டு வசதியானது ஏவுகணை வாகன அமைப்புகளின் உற்பத்தி, சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
  • தூத்துக்குடியில் உள்ள இந்த சிறப்பு வசதிக்காக மத்திய அரசு ₹100 கோடியை அனுமதித்துள்ளது.
  • இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) ஆரம்பத்தில் இந்த தொழில்நுட்ப அமைப்புகளை இயக்கும், பின்னர் அவை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்படும்.
  • பொதுவான தொழில்நுட்ப வசதிகள் என்பவை புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினரால் விண்வெளி வன்பொருள்களைச் சோதனை செய்தல், சரி பார்த்தல் மற்றும் ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்படும் பகிரப்பட்ட உள்கட்டமைப்பு மையங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்