TNPSC Thervupettagam

தமிழ்நாடு மழைநீர் சேகரிப்பு பிரச்சாரம்

October 23 , 2026 16 hrs 0 min 48 0
  • நீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டலை மேம்படுத்தும் வகையில் மாநிலம் தழுவிய மழைநீர் சேகரிப்பு (RWH) பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
  • இந்தப் பிரச்சாரம் ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை புதுப்பிக்கும், மேலும் வீடுகள், குடியிருப்புகள், நிறுவனங்கள், வணிக கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் புதிய வசதிகளை உருவாக்கும்.
  • நிலத்தடி நீர் செறிவூட்டலை மேம்படுத்த தண்ணீர் எடுக்கும் இடங்களுக்கு அருகில் தடுப்பணைகள் மற்றும் உறிஞ்சுகுழிகள் கட்டப்படும், அதே சமயம் சேதமடைந்த அமைப்புகள் சரி செய்யப் படும்.
  • தமிழ்நாடு 2002 ஆம் ஆண்டில் மழைநீர் சேகரிப்பை ஒரு மாநிலக் கொள்கையாக அறிமுகப் படுத்தியது, இதன்மூலம் கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைப்பது கட்டாயமாக்கப்பட்டது.
  • 1,202 பிர்காக்களில் (வருவாய் உட்பிரிவுகள்), 476 பிர்காக்களில் நிலத்தடி நீர்மட்டம் திருப்திகரமான அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்