TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில குறிகாட்டி கட்டமைப்பு 2.0

January 14 , 2026 8 days 93 0
  • 2030 ஆம் ஆண்டிற்குள் ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகளில் (SDGs) முன்னேற்றத்தைக் கண்காணிக்க தமிழ்நாடு மாநிலக் குறிகாட்டி கட்டமைப்பு (SIF) 2.0 என்ற கட்டமைப்பினை வெளியிட்டுள்ளது.
  • இந்தக் கட்டமைப்பு 17 SDG இலக்குகளுக்கான குறிகாட்டிகளின் எண்ணிக்கையயை 314 என்பதிலிருந்து 244 ஆகக் குறைக்கிறது என்பதோடு மேலும் இது 28 மாநிலத் துறைகளால் கண்காணிக்கப்படுகிறது.
  • நிதி ஆயோக் அமைப்பின் படி, பீகாரில் 33.76% மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 22.93% என்பதுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் பல பரிமாண வறுமை விகிதம் 2.2% ஆக உள்ளது.
  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 13 மற்றும் மருத்துவமனை சார் பிரசவங்களில் 99.98% ஆக உள்ளது.
  • தமிழ்நாடு 2023–24 ஆம் ஆண்டிற்கான SDG இந்திய குறியீட்டில் 78 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • SIF 2.0 ஆனது ஐ.நா. உலகளாவிய குறிகாட்டி கட்டமைப்பு மற்றும் இந்தியாவின் தேசிய குறிகாட்டி கட்டமைப்புடன் (2025) இணைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்