தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவர்
January 3 , 2021 1655 days 1719 0
மதராஸ் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி S.பாஸ்கரன், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றார்.
அவர் தமிழக ஆளுநரால் நியமிக்கப் பட்டுள்ளார்.
முதலமைச்சர், மாநில சட்டமன்றத்தின் சபாநாயகர், உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவால் இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாகவும், தலைவராகவும் நியமனம் செய்யப் படுவோர் பரிந்துரைக்கப் படுவார்கள்.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மீனா குமாரியின் பதவிக் காலத்திற்குப் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தப் பதவி காலியாக இருந்தது.
2020 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், இந்த ஆணையத்தின் தற்காலிகத் தலைவராக நீதிபதி ஜெயச்சந்திரன் என்பவர் நியமிக்கப் பட்டிருந்தார்.