TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில விருதுகள் 2026

January 16 , 2026 6 days 119 0
  • திருவள்ளுவர் விருது 2026 ஆனது டாக்டர் சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்பட உள்ளது.
  • காமராஜர் விருது 2025 இதயத்துல்லாவுக்கு வழங்கப்பட உள்ளது.
  • மகாகவி பாரதியார் விருது 2025 நெல்லை ஜெயந்தாவிற்கும், 2025 ஆம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும் வழங்கப்பட உள்ளன.
  • தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது 2025 ஆனது எழுத்தாளரும் முன்னாள் தலைமைச் செயலாளருமான இறையன்புவுக்கு வழங்கப்பட உள்ளது.
  • திருவள்ளுவரின் கருத்துகளைப் பரப்பியதற்காக அய்யன் திருவள்ளுவர் விருது ஆனது அறிஞர் M.P. சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்பட உள்ளது.
  • சமூக நீதிக்காகப் பணியாற்றியதற்காக வழக்கறிஞர் A. அருள்மொழி தந்தை பெரியார் விருதுக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
  • ஆதி திராவிடர் (பட்டியலிடப் பட்ட சாதியினர்) மற்றும் பழங்குடியினச் சமூகங்களுக்கான பணிக்காக அண்ணல் அம்பேத்கர் விருதை M. சிந்தனைச் செல்வன் பெற உள்ளார்.
  • தி.மு.க. மூத்தத் தலைவரும் அமைச்சருமான துரைமுருகனுக்குப் பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படவுள்ளது.
  • விருது பெறும் ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் ரூபாய் ரொக்கமும், ஒரு தங்கப் பதக்கமும் வழங்கப்படும் என்பதோடு இந்த விருதினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்குவார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்