TNPSC Thervupettagam

தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்புக் கொள்கை 2026

October 31 , 2026 22 days 166 0
  • தமிழ்நாடு அரசு 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அதிக செலவிலான மின்சாரக் கொள்முதலைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஆதரிக்கவும் 2.5 ஜிகாவாட் (GW) மின்கலச் சேமிப்புத் திறனை அடைவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் கொள்கையானது அதன் மூன்றாண்டு செல்லுபடியாகும் காலத்தில் குறைந்தது 2.5 ஜிகாவாட் (10 GWh) மின்கலச் சேமிப்புத் திறனை இலக்காகக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) ஒப்புதலுக்கு உட்பட்டு, மின்பகிர்மான மற்றும் மின் விநியோகக் கட்டணங்களில் 10 ஆண்டு தள்ளுபடியை இது வழங்குகிறது.
  • 1 மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட புதிய சூரியசக்தி மற்றும் சூரியசக்தி-கலப்பினத் திட்டங்கள், நிறுவப்பட்ட சூரியசக்தித் திறனில் குறைந்தபட்சம் 10% க்குச் சமமான வெளியேற்றத் திறன் கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (BESS) நிறுவ வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்