TNPSC Thervupettagam

தமிழ்நாடு மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை

June 27 , 2026 13 hrs 0 min 48 0
  • தமிழ்நாடு அரசு மாநில மின்சாரத் துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டது, அதில் அதன் நிதி நிலை மற்றும் உள்கட்டமைப்பு நிலை ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
  • தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL), தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் (TNPGCL), தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் (TNGECL) மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் (TANTRANSCO) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கடன் ₹2.47 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு ள்ளது.
  • மின் உற்பத்தித் திறனில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, பழையதாகிவிட்ட மின் பகிர்மான மற்றும் கடத்துதல் உள்கட்டமைப்பு மற்றும் மின்சாரத் துறையில் உள்ள 45% மனிதவளப் பற்றாக்குறை ஆகியவற்றை இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
  • மின்சார சேவைகளை மேம்படுத்தும் வகையில் மின் உள்கட்டமைப்பை நவீனப் படுத்துதல், துணை மின் நிலையங்களைப் புதுப்பித்தல் மற்றும் 15,000 ஊழியர்களை பணியமர்த்துதல் ஆகியவற்றை இந்த அறிக்கை முன்மொழிந்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டில் மின்கட்டண திருத்தம் ஏதும் இருக்காது என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்