தமிழ்நாடு மின்னணுக் கூறுகள் உற்பத்தித் திட்டம் 2025
May 2 , 2025 66 days 173 0
தமிழக முதலமைச்சர் தமிழ்நாடு மின்னணுக் கூறுகள் உற்பத்தித் திட்டத்தினை (ECMS) அறிமுகப் படுத்தியுள்ளார்.
இம்மாநிலம் முழுவதும் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 30,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பது மற்றும் சுமார 60000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் இலக்காகும்.
நாட்டிலேயே முதன்மையான தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டம் ஆனது, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உற்பத்தி அலகுகளை நிறுவும் நிறுவனங்களுக்கு பொருத்தமான மானியங்களை வழங்கும்.
இம்மாநில அரசின் இந்தத் திட்டம் ஆனது, நெகிழ்வான மின்சுற்றுப் பலகைகள் (FPCBs), லித்தியம்-அயனி கலன்கள், HDI/MSAP பலகைகள், திரைப் பெட்டகங்கள் மற்றும் பிற கூறுகள் உட்பட சுமார் 11 அதிக உற்பத்திக்கான வளர்ச்சி காணும் பொருள்/கூறுகளை உள்ளடக்கியது.
மத்திய அரசானது, சமீபத்தில் ECMS திட்டத்திற்கான வழி காட்டுதல்கள் மற்றும் அதன் இணைய தளத்தினை வெளியிட்டுள்ளது.