TNPSC Thervupettagam

தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை

September 5 , 2026 8 days 57 0
  • சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீன்பிடிக் கப்பல்கள் பிராந்தியக் கடற் பரப்பிலிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு (EEZ) செல்வதற்கான விதிகளை வகுக்க உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு உத்தரவிட்டுள்ளது.
  • சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குச் செல்லும் கப்பல்களுக்கு தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை விதிகள், 2020-இன் கீழ் ஒரு குறிப்பிட்ட வழிகாட்டுதல் தடத்தை தமிழ்நாடு உருவாக்க வேண்டும்.
  • சிறப்புப் பொருளாதார மண்டல விதிகள், 2025 ஆனது, சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட மீன்பிடிக் கப்பல்களுக்கான அணுகல் அனுமதிச் சீட்டுகளை வழங்குகிறது, அதே நேரத்தில் 2020 மாநில விதிகள் தமிழ்நாட்டின் பிராந்தியக் கடற்பரப்பிற்குள் மீன்பிடிப்பதை ஒழுங்குபடுத்துகின்றன.
  • மத்திய அரசும், தமிழ்நாடும் தத்தம் பகுதிகளில் மீன்பிடிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கு சமமான மற்றும் தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டுள்ளன என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், கூட்டுறவுக் கூட்டாட்சிக்கு அழைப்பு விடுத்தது.
  • சிறப்புப் பொருளாதார மண்டல அணுகல் அனுமதிச் சீட்டுகளுக்கான விண்ணப்பங்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு உத்தரவிட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்