TNPSC Thervupettagam

தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டம்

September 23 , 2026 11 days 135 0
  • வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவுவதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாட்டில் மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தை மாநில அரசு சென்னையில் தொடங்கியது.
  • ஆகஸ்ட் 5 முதல் விண்ணப்பித்த நுகர்வோர் 1 கிலோவாட் (kW) திறனுக்கு ₹35,000, 2 கிலோவாட்டிற்கு ₹70,000 மற்றும் 3 கிலோவாட்டிற்கு ₹1 லட்சம் என மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த மானியத்தைப் பெறலாம்.
  • 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் கூடுதல் மானியத்திற்காக மாநில அரசு ₹50 கோடியை ஒதுக்கி உள்ளது.
  • தமிழ்நாடு மின் பகிர்மான கழக (TNPDCL) விண்ணப்பங்கள், மானிய விவரங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சூரியசக்தி விற்பனையாளர்களுக்கான இணைய தளத்தை அறிமுகப்படுத்தியது.
  • தமிழ்நாடு முழுவதும் உள்ள வீடுகளில் சூரிய ஆற்றலின் பயன்பாட்டை இத்திட்டம் ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்