TNPSC Thervupettagam

தமிழ்நாடு AVGC-XR கொள்கை 2026

March 16 , 2026 14 hrs 0 min 70 0
  • அசைவூட்டம், காட்சி விளைவுகள், விளையாட்டு, சித்திரக்கதைகள் மற்றும் விரிவாக்கப் பட்ட மெய்நிகர் நிலை ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு 'AVGC-XR கொள்கை 2026'-ஐ அறிவித்துள்ளது.
  • AVGC-XR என்பது அசைவூட்டம், காட்சி விளைவுகள், விளையாட்டு, சித்திரக்கதைகள் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் நிலை ஆகியவற்றின் சுருக்கமாகும்.
  • இக்கொள்கையைச் செயல்படுத்துவதற்கான முதன்மை முகமையாக தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) செயல்படும்.
  • இந்தக் கொள்கையானது, 2030 ஆம் ஆண்டிற்குள் 200 AVGC-XR புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கவும், 100 நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கவும் இலக்கு வைத்துள்ளது.
  • திறன் மேம்பாட்டிற்காக 300 முதல் 400 கல்லூரிகளில் 'டிஜிட்டல் கலை மையங்களை' நிறுவவும் இக்கொள்கை திட்டமிட்டுள்ளது.
  • ஏராளமான விளையாட்டு கலைக்கூடங்கள் மற்றும் காட்சி விளைவு நிறுவனங்களுடன், சென்னை இந்தியாவின் ஒரு முக்கிய AVGC-XR மையமாக உருவெடுத்து வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்