January 21 , 2026
5 days
107
- தமிழக முதலமைச்சர் அயலகத் தமிழர்களை தங்கள் தமிழ் அடையாளத்தையும் வேர்களையும் ஒருபோதும் மறக்க வேண்டாம் என்று அழைப்பு விடுத்தார்.
- சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட இதன் கொண்டாட்டங்களில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் உட்பட பல பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
- இந்த நிகழ்வின் போது, பின்வரும் விருதுகள் முதல்வரால் வழங்கப்பட்டன:
- பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைவர் டாக்டர் அண்ணாமலைக்கு தமிழ் மாமணி விருது.
- கணியன் பூங்குன்றனார் விருதுகள் முகமது ஹனிஃபா பின் அப்துல்லா (கல்வி), சரவணன் பத்மநாபன் மற்றும் செந்தில்குமார் இராமலிங்கம் (சமூக மேம்பாடு), கோகிலவாணி பிரகாஷ்தேவன் (பெண்கள்), அன்சாரி வாஹித் (வர்த்தகம்), திருமலைசாமி வேலவன் (அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்), கபிலன் தர்மராஜன் (மருத்துவம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
- சிறந்தக் கலாச்சாரத் தூதர் விருது சாவ் சு து ஸார் எனும் தீபா இராணிக்கு வழங்கப் பட்டது.
Post Views:
107