தமிழ்நாட்டின் பறவை பதிவு ஒரு மில்லியன் இலக்கை எட்டியது
November 6 , 2017 2862 days 1266 0
பறவைகள் கண்காணிப்பாளர்கள் தங்களின் கண்காணிப்பை பதிவு செய்வதற்கான தளமான ஈபேர்ட் இந்தியா (e-Bird India) என்ற இணையவாயிலின் தகவல் படி, கண்காணிக்கப்பட்ட பறவைகளின் குறிப்பிட்ட இனம், கண்காணிப்பின் குறிப்பிட்ட தேதி, நேரம் மற்றும் இடத்தில் போன்றவற்றை பதிவு செய்யும் மாநிலப் பறவைகள் பதிவானது ஒரு மில்லியன் பதிவுகளை எட்டியுள்ளது.
இதன்மூலம் கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு அடுத்து இந்த இலக்கை அடையும் மூன்றாவது மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளது.
அதிகப் பறவைகளின் பதிவுகளைப் பெற்று, கோயம்புத்தூர் முதலிடத்தில் உள்ளது. காஞ்சிபுரம் பட்டியலில் இரண்டாவதாக உள்ளது.