தமிழ்நாட்டின் புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கொள்கை
September 12 , 2018 2508 days 2159 0
புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கொள்கை 2018-ஐ தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இக்கொள்கை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்களின் முதலீட்டாளர்களின் தேவைகள், நிலையான நிர்வாக ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்குவோரின் தேவைகள், நிதி உதவிகள், மூலதன மானியங்கள், வரி விலக்குகள், சிறப்பு சலுகைகள் ஆகியவற்றில் உள்ள பிரச்சனைகளைக் களையும்.
மேலும் புதிதாக தொழில் தொடங்குவோர் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைப்பதற்கு விதிகள் உள்ளன.
மேலும் இக்கொள்கையின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட முகவர்களிடமிருந்து பசுமைத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஒற்றைச் சாளர வசதிகளுக்காக முன்கூட்டியே அனுமதி பெறுவதை ஊக்குவிக்கிறது.