மாநிலத்தின் சில பகுதிகளில் மழை பெய்ததால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் கோடையில் தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை குறைந்துள்ளது.
தமிழ்நாடு மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு மே 02 ஆம் தேதியன்று 20,830 மெகாவாட் என்ற உச்சகட்ட மின் தேவை பதிவானது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியன்று சுமார் 454.32 மில்லியன் அலகுகள் என்ற அதிகபட்ச தினசரி நுகர்வு பதிவாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாநிலத்தின் உச்ச கட்ட மின்சாரத் தேவையானது 19,864 மெகாவாட் ஆகவும், ஒட்டு மொத்த மின்சாரத் தேவை சுமார் 11,705 மில்லியன் அலகுகளாகவும் இருந்தது.
தெற்குப் பிராந்திய மின்சார விநியோக மையத்தின் தரவுகளின்படி, மே 16 ஆம் தேதி அன்று பூர்த்தி செய்யப்பட்ட அதிகபட்ச மின்சாரத் தேவை 18,868 மெகாவாட் ஆகும்.