தமிழ்நாடு மாநில நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம் (TNFR சட்டம்), 2003, மொத்தப் பொறுப்புகளை "மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மாநிலத்தின் பொதுக் கணக்கின் கீழ் உள்ள கடன்கள் " என்று வரையறுக்கிறது.
மாநிலத்தின் திட்டமிடப்பட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நிறுவனங்கள் / நிறுவனங்களால் வாங்கப் படும் கடன்கள் அதன் நிதிக் கணக்குகளில் பதியப் படுவதில்லை.
இந்தக் கடன்கள் மறைமுகமாக மாநிலத்தின் பொறுப்புகளில் சேர்க்கப் படுகின்றன.
மாநிலத்தின் திட்டமிடப்பட்டத் திட்டங்களுக்கு, அசல் மற்றும் வட்டியானது மாநில அரசால் செலுத்தப் படுகிறது.
2021-22 நிதியாண்டிலிருந்து அமலுக்கு வரும் வகையில், பட்ஜெட்டுக்கு வெளியே கடன்களைக் கட்டுப்படுத்தவும், மாநிலங்களிடையே நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்தவும், 'அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள்' வாங்கும் கடன்கள், அசல் மற்றும்/அல்லது வட்டி ஆகியன மாநிலப் பட்ஜெட்டுகள் மற்றும்/அல்லது வரிகள்/செஸ் அல்லது அந்த மாநிலத்தின் வேறு எந்த வருவாயின் மூலம் அவை திருப்பிச் செலுத்தப் படுகின்றன என்பதோடு அவை மாநில அரசாங்கங்களுக்குக் கடன் வாங்குவதற்கான ஒப்புதலை வழங்குவதற்காக ஒரு காரணியாகக் கொள்ளப்படுகின்றன.
சில மாநிலங்கள் பட்ஜெட்டுக்கு வெளியே கடன்களைப் பயன்படுத்தி நிகர கடன் வாங்கும் உச்ச வரம்பைத் தவிர்ப்பதன் விளைவைக் கருத்தில் கொண்டு இது செய்யப் பட்டது.
தமிழ்நாடு உட்பட மாநிலங்கள், மாநில மேம்பாட்டுக் கடன்கள் (SDLs) எனப்படும் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் நிதி திரட்டுகின்றன.
இந்தப் பத்திரங்களுக்கான ஏலத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நடத்துகிறது.
இந்தப் பத்திரங்கள் பல்வேறு காலக் கட்டங்களுக்கு வெளியிடப்படுகின்றன என்பதோடு மேலும் அதன் முதிர்ச்சியின் போது அம்மாநிலங்கள் அசல் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்.
SDLகள் தமிழ்நாட்டின் நிலுவையில் உள்ள கடன்களில் பெரும்பகுதியை உருவாக்குகின்றன.
மாநிலங்களுக்கான கடன் வாங்கும் உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
கடன் வாங்கும் உச்சவரம்பு 2025-26 ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3% ஆகும்.
மின்சார விநியோகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது மற்றும் மாநிலத்திற்குள் மின் பரிமாற்றத் திறனை அதிகரிப்பதைப் பொறுத்து மாநிலங்களுக்கு GSDPயில் 0.5% கூடுதல் கடன் வாங்க அனுமதிக்கப்படுகிறது.
2025-26 ஆம் ஆண்டில் மொத்தம் ₹1,62,096.76 கோடி கடன் வாங்கி ₹55,844.53 கோடியினைத் திருப்பிச் செலுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் விளைவாக, 2025-26 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டின்படி, மார்ச் 31, 2026 நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன் ₹9,29,959.3 கோடியாக இருக்கும்.
CAG அறிக்கையின்படி, 2024-25 முதல் வட்டிக்கான மாநிலத்தின் பொறுப்பு ₹29,159.18 கோடியாக இருக்கும்.
மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் நிலுவையில் உள்ள சந்தைக் கடன்களில் அசல் தொகை ₹3,88,202.82 கோடியாக இருக்கும்.