TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் 15வது முதலமைச்சர்

May 11 , 2026 4 days 186 0
  • தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் 15-வது முதலமைச்சராகப் பதவியேற்றார்.
  • பதவியேற்பு விழா சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
  • ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், புதிய முதலமைச்சருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
  • அவருடன் ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றனர்.
  • அரசியலமைப்பின் சரத்து 164-இன் கீழ் ஆளுநர் முதலமைச்சரை நியமித்தார்.
  • 2026 ஆம் ஆண்டு மே 13 அல்லது அதற்கு முன்னதாக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருமாறு விஜய்க்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
  • கடந்த ஐந்து தசாப்தங்களில், அதிமுக அல்லது திமுக ஆகிய இரு கட்சிகளும் இல்லாத ஒரு அமைச்சரவை தமிழ்நாட்டை ஆட்சி செய்வது இதுவே முதல் முறையாகும்.
  • 1950 ஆம் ஆண்டு முதல் விஜய்க்கு முன்னதாக 14 முதலமைச்சர்கள் இருந்துள்ளனர்; மேலும் 1969ம் ஆண்டில் மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்பட்ட பிறகு இவர் 9-வது முதலமைச்சர் ஆவார்.
  • வி. ஆர். நெடுஞ்செழியன் என்பவர், சி. என். அண்ணாதுரை (1969) மற்றும் எம். ஜி. இராமச்சந்திரன் (1987) ஆகியோரின் மறைவுக்குப் பிறகு இருமுறை தற்காலிக முதலமைச்சராகப் பணியாற்றினார்.
  • இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்த க. காமராஜர், 1954 முதல் 1963 ஆம் ஆண்டு வரை நீண்ட காலம் முதலமைச்சராகப் பணியாற்றினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்