TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் TN-KET திட்டம்

July 16 , 2025 15 hrs 0 min 75 0
  • TN-KET (காசநோய் இறப்பில்லா திட்டம்) ஆனது 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது கடுமையான காசநோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மிகப் பொருத்தமான சிகிச்சையை வழங்குவதன் மூலம் காசநோய் (TB) உயிரிழப்பைக் குறைப்பதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்ட தமிழ்நாட்டின் மாநில அளவிலான முன்னெடுப்பாகும்.
  • இது BMI, ஆக்ஸிஜன் அளவு, சுவாச வீதம், கால் வீக்கம் மற்றும் நிலையாக நிற்பதற்கான திறன் ஆகிய ஐந்து அளவுருக்களை மதிப்பிடும் ஒரு எளிய அறிக்கைப் பதிவு அடிப்படையிலான சோதனைக் கருவியைப் பயன்படுத்துகிறது.
  • இந்தத் திட்டமானது, 98% கடுமையான காசநோய் நோயாளிகளை ஏழு நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்க விரைவாகக் கண்காணிக்கிறது.
  • TN-KET ஆனது ஆறு மாதங்களுக்குள் ஆரம்பகாலக் காசநோய் உயிரிழப்புகளில் 20% குறைப்பை அடைந்தது.
  • இது இந்தியாவின் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்துடன் (NTEP) இணைக்கப்பட்ட அளவிடக் கூடிய மாதிரியையும் வழங்குகிறது.
  • இலக்கு சார்ந்த திட்டங்களை நன்கு செயல்படுத்துவதற்காக என நிகழ்நேரத் தரவைப் பயன்படுத்துகின்ற இந்தத் திட்டமானது, தரவு சார்ந்த நிர்வாகத்தை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்