தமிழ்நாட்டில் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்கள்
September 17 , 2017 2783 days 1080 0
தேசிய சுகாதாரக் கொள்கையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் வீடற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
இம்மையங்கள் அமைந்துள்ள இடங்கள் வருமாறு ,
வேலூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
தேனி
விழுப்புரம்
மனநல ஆரோக்கியம் மற்றும் வறுமை ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் 'தி பான்யன்' (The banyan) எனும் அரசு சாரா தொண்டு நிறுவன உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அரசு நடத்தும் மற்றும் அரசின் நிதியுதவி பெரும் மருத்துவமனைகளில் , வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள வீடற்ற மனநலம் பாதிப்பு உடையவர்கள் முறையான சிகிச்சையும் , கட்டணமற்ற மருத்துவ சேவையும் பெற உரிமை உடையவர்கள் எனும் மனநல சுகாதார சட்டம் , 2017 (Mental healthcare Act, 2017) இன் படி இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது