TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் ஈரநில மேம்பாட்டு மசோதா

September 3 , 2026 10 days 86 0
  • திட்டமிடப்படாத பகுதிகளில் ஈரநில மேம்பாடு தொடர்பாக 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது.
  • திட்டமிடப்படாத பகுதிகளில் ஈரநிலங்களை மேம்படுத்துவதற்கு முன் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்ற தேவையை நீக்க இந்த மசோதா வகை செய்கிறது.
  • இத்தகைய மேம்பாட்டுப் பணிகளுக்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன் அனுமதி வழங்குவதற்கான அதிகாரத்தை நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநருக்கு வழங்க இது முன்மொழிகிறது.
  • நகர்ப்புற மேம்பாட்டு அதிகார அமைப்புகளில் தொடர்ச்சி மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்காக முழுநேரத் தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்-செயலாளர் பதவிகளை உருவாக்கவும் இந்த மசோதா முன்மொழிகிறது.
  • மாவட்ட நிர்வாகத்துடனான ஒருங்கிணைப்பிற்காக நகர்ப்புற மேம்பாட்டு அதிகார அமைப்பின் உறுப்பினராக மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து நீடிப்பார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்