தமிழ்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை திட்டங்கள்
February 20 , 2021 1613 days 727 0
பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டில் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு துறை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் சென்னை மணலியில் சி.பி.சி.எல். (சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) வளாகத்தில் கேசோலினில் இருந்து கந்தகத்தை நீக்கும் வளாகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
நாகப்பட்டினத்தில் அமையும் காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்திற்கும் சேர்த்து அவர் அடிக்கல் நாட்டினார்.