TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் கைத்தறி மற்றும் ஜவுளி நடவடிக்கைகள்

September 4 , 2026 9 days 84 0
  • கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கான அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியை 10% உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
  • தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரசின் பங்களிப்பு 8% லிருந்து 16% ஆக அதிகரிக்கும்.
  • அரசு மற்றும் பல்வேறு தரப்பினரின் பிரதிநிதிகளைக் கொண்டு தமிழ்நாடு பின்னலாடை வாரியம் அமைக்கப்படும்.
  • உயர்தர பட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஆதரிப்பதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவில் பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையம் அமைக்கப்படும்.
  • 1,000 கைத்தறி அலகுகளில் சூரிய ஒளிமின் தகடுகள் அமைக்க 100% மானியம் வழங்கப் படும், அதே நேரத்தில் ₹1 கோடி செலவில் இயற்கை சாயகம் ஒன்று நிறுவப் படும்.
  • தஞ்சாவூர் மாவட்டத்தில் ₹20 லட்சம் செலவில் திருபுவனம் பட்டுக்கான வடிவமைப்பு மையம் அமைக்கப்படும், மேலும் கரூரில் வீட்டு ஜவுளிகளுக்கான சிறப்பு மையம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்