கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவுத் துறை மூலம் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 66.24 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு ₹53,340 கோடி பயிர் கடன்கள் வழங்கப் பட்டுள்ளன.
சுமார் 11.70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடையும் வகையில் ₹4,904 கோடி மதிப்புள்ள நகைக் கடன்களையும் இது தள்ளுபடி செய்துள்ளது.
1.01 லட்சத்திற்கும் அதிகமான சுய உதவிக் குழுக்களுக்கு ₹2,118.80 கோடி மதிப்புள்ள சுய உதவிக் குழு (SHG) கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
கால்நடை மேம்பாட்டிற்காக 11.88 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் ₹6,372 கோடி கடன்களைப் பெற்றுள்ளனர்.
47,221 மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் ₹225.94 கோடி கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
சுமார் 16,500 பணிக்குச் செல்லும் பெண்கள் ₹470 கோடி மதிப்புள்ள கடன்களைப் பெற்றுள்ளனர்.
49,000க்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோருக்கு சுமார் ₹283.27 கோடி கடன்கள் வழங்கப் பட்டன.
அண்ணல் அம்பேத்கர் வணிக முன்னோடித் திட்டத்தின் கீழ், சுமார் 86 துப்புரவுத் தொழிலாளர்கள் தொழில்முனைவோராக மாற ₹52.34 கோடி கடன்களைப் பெற்றனர்.
இதுவரையில் 4,494 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு மொத்தம் ₹18.80 கோடி கடன்கள் வழங்கப் பட்டுள்ளன.