தமிழ்நாட்டில் புதிய சுற்றுச்சூழல் சார் முன்னெடுப்புகள்
June 30 , 2024 388 days 442 0
கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கழகத்தில் 10 கோடி ரூபாய் செலவில் உள்நாட்டு விதை இனங்கள் பெட்டகத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இராமேஸ்வரம் மற்றும் மன்னார் வளைகுடாவில் 15 கோடி ரூபாய் செலவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா உருவாக்கப்படும்.
நாமக்கல் கொல்லிமலையில் இரவு நேர வான்வெளிப் பூங்கா அமைக்கப்படும்.
கும்பகோணம் அணைக்கரை வன வரம்பில் 2.50 கோடி ரூபாய் செலவில் முதலை வளங்காப்பு மையம் அமைக்கப்படும்.
புகழ்பெற்ற வனவிலங்கு உயிரியலாளர் A.J.T. ஜான்சிங்கின் மரபினை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் ‘டாக்டர் A.J.T. ஜான்சிங் வனவிலங்கு பாதுகாப்பு விருதினை’ உருவாக்க அரசு முன்மொழிந்துள்ளது.
வனவிலங்கு வளங்காப்பில் பெரும் பங்களிப்பை வழங்கிய சிறந்து விளங்கும் வன விலங்கு ஆர்வலருக்கு இந்த விருது வழங்கப்படும்.