குஜராத்தின் பாவ்நகரில் இருந்தபடி, சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் மூன்று உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
சென்னை துறைமுகத்தில், கடலோரப் பகுதிக்கு பின்னால் உள்ள 850 மீட்டர் நீளமுள்ள தடுப்புச் சுவர் 33 கோடி ரூபாய் செலவில் சரி செய்யப் பட்டு பலப்படுத்தப் படும்.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIT-M) நடத்திய ஆய்வின் அடிப்படையில், இந்தத் திட்டமானது நீண்டகால துறைமுக உறுதித் தன்மையை உறுதி செய்வதையும், செயல்பாட்டு இடையூறுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
காமராஜர் துறைமுகத்தில், கார் மற்றும் கொள்கலன் உள்ள பகுதிகள் உட்பட எட்டு இடங்களில் 25 கோடி ரூபாய் செலவில் தீயணைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
காமராஜர் துறைமுகத்தில் உள்ள மற்றொரு திட்டத்தில் தேசியக் கடற்கரை போக்குவரத்துச் செயலாக்க அமைப்பு (NCTPS) சாலையிலிருந்து நிலக்கரி சேமிப்புக் கிடங்கிற்கு கற்காரை/கான்கிரீட் சாலை அமைப்பதும் இரண்டு பாலங்களை மீண்டும் கட்டமைப்பதும் அடங்கும்.
58 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ள சாலை மற்றும் பால கட்டமைப்புத் திட்டம், கனரக வாகனப் பாதுகாப்பு மற்றும் நிலக்கரி கையாளும் திறனை மேம்படுத்தும் என்ற நிலையில் இது 2027 ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.