குறைக்கடத்தி மற்றும் விண்வெளி உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு ₹5,980 கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர் & டி) மையத்தை நிறுவ MinebeaMitsumi நிறுவனம் ₹1,980 கோடி முதலீடு செய்யவுள்ளது.
Mahindra Origins தொழில்துறை பூங்காவில் அமையவுள்ள இது, Insulated-Gate Bipolar Transistors - (IGBT), Integrated Circuits (IC), மோட்டார்கள் மற்றும் உணர்விகளை உற்பத்தி செய்யும்.
இந்த மாநிலத்தில் விண்வெளிதுறைசார் உற்பத்தியை ஆதரிப்பதற்காக Aequs Group நிறுவனத்துடன் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.