தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்தவர்களுக்கான உதவி மையம்
February 15 , 2019 2291 days 760 0
ஒடிசா மாநில அரசு திருப்பூரில் புலம்பெயர்ந்தவர்களுக்கான உதவி மையத்தை ஆரம்பித்திருக்கின்றது.
இம்மையம் ஒடிசாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு யாரெல்லாம் புலம்பெயர்ந்து உள்ளார்களோ அவர்களுக்கு ஆதரவையும் உதவியையும் வழங்கும்.
இம்மையம் முக்கியமாக தீன்தயாள் உபாத்யாயா கிராமீன் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற திறனற்ற தொழிலாளர்களின் குறைகளைத் தீர்க்கும்.
தேசிய தலைநகரப் பகுதியான டெல்லியிலும், பெங்களூருவிலும் ஒடிசா அரசால் ஏற்படுத்தப்பட்ட இதுபோன்ற மையங்களைத் தவிர சென்னையில் ஏற்படுத்தப்பட்டது அதன் மூன்றாவது மையமாகும்.
தீன்தயாள் உபாத்யாயா கிராமீன் கௌசல்யா யோஜனாத் திட்டத்தின் கீழ் இம்மாதிரியான மையங்களை ஏற்படுத்த கட்டளையிடப்பட்ட வகையில் தமிழ்நாட்டில் இம்மாதிரியான மையத்தை ஆரம்பித்ததில் ஒடிசாவே முதல் மாநிலமாகும்.