தமிழ்நாட்டில் உள்ள சில முக்கியக் கட்டமைப்புகளில் பொதுமக்கள் பாதுகாப்புப் பயிற்சி மற்றும் ஒத்திகையானது சமீபத்தில் நடைபெற்றது.
இது கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் சென்னைத் துறைமுக அறக்கட்டளை வளாகங்களில் நடத்தப்பட்டது.
இந்தப் பயிற்சியின் போது, உள்வரும் விமானத் தாக்குதலை எதிர்கொள்வதற்காக என இந்த இரண்டு முக்கியக் கட்டமைப்புகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான சில ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டன.