TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் மூன்று யானை வழித்தடங்கள்

August 30 , 2026 14 days 153 0
  • ஓசூர் வனக்கோட்டம், காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் மூன்று புதிய யானை வழித்தடங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
  • இந்த வழித்தடங்கள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே ஆசிய யானைகளால் பயன்படுத்தப்படும் காவிரிக்கு அப்பாலான இயக்கப் பாதையின் ஒரு பகுதியாகும்.
  • ஜவளகிரி-உலிபண்டா-தக்கட்டி வழித்தடமானது 18.50 கி.மீ நீளம்; 3,241.53 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • ஜவளகிரி-பனை-அஞ்செட்டி வழித்தடமானது 20.90 கி.மீ நீளம்; 6,881.47 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • பிலிக்கல்-ஜவளகிரி வழித்தடமானது 2.20 கி.மீ நீளம்; 196 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • இந்த மூன்று வழித்தடங்களும் பாதுகாக்கப்பட்ட வனம் மற்றும் சரணாலய எல்லைகளுக்குள் உள்ளன, எந்தவொரு தனியார், பொது அல்லது வருவாய் கிராம நிலங்களும் பாதிக்கப்படவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்