தமிழ்நாட்டில் வண்ணத்துப்பூச்சிகளின் இடம்பெயர்வு 2023
November 29 , 2023 534 days 478 0
வடகிழக்குப் பருவ மழையின் தொடக்கத்துடன் இணைந்த வருடாந்திர நிகழ்வாக, கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் சமவெளிகளில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கி வண்ணத்துப் பூச்சிகள் இடம் பெயர்வது இந்த ஆண்டு மிகவும் பாதி அளவிற்கும் குறைவாக இருந்தது.
மேற்கு மண்டல மாவட்டங்களில் இயல்பை விட மிகவும் குறைவான மழைப்பொழிவு பதிவாகியதால், செப்டம்பர் முதல் இன்று வரை வண்ணத்து ப்பூச்சிகளின் பெரிய அளவிலான இடம் பெயர்வு பதிவாகவில்லை.
வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன், டானைனே துணைக் குடும்பத்தினைச் சேர்ந்த நீல வரியன், கருநீல வரியன், இரட்டை வரிக் கருப்பன், வெண்புள்ளி கருப்பன் (பொதுவாக 'வரியன்கள் மற்றும் கருப்பன்கள்' என அழைக்கப்படும்) போன்ற வண்ணத்துப் பூச்சிகள் இம்மலைகளை விட்டு வெளியேறி மேற்கு நோக்கி பறக்கும்.
ஆனால் ஆய்வாளர்களால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து வரியன்கள் மற்றும் கருப்பன்கள் வகைகளின் குறைந்த அளவிலான இடம்பெயர்வு மட்டுமே காண இயன்றது.
தமிழ்நாடு அதன் இயல்பான அளவை விட (2023 ஆம் ஆண்டு ஜூன்-செப்டம்பர் மாதங்களில்) அதிகமாக 92% மழைப் பொழிவினைப் பெற்றுள்ளது.
மேற்கு மண்டலத்தில் உள்ள இவற்றின் இடம் பெயர்வு இயக்கம் பதிவான மாவட்டங்கள், குறிப்பாக சேலம் மற்றும் நாமக்கல் ஆகியவை 7% மற்றும் 10% மழைப் பற்றாக்குறையைப் பெற்றுள்ளன.