தமிழ்நாட்டின் நான்கு சோதனை மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசித் திட்டத்தில், ஆறு வாரங்களில் 81% இலக்கு எட்டப் பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதற்காக, 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் இத்திட்டம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று தொடங்கப்பட்டது.
இந்த சோதனை திட்டம் அரியலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.
சுமார் 27,000 சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 81% அளவிலான HPV தடுப்பூசி ஒருமுறை போடப்பட்டது.
இந்திய அரசின் நாடு தழுவிய HPV தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடர்ந்து, இத்திட்டம் தற்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.