TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் VB-G RAM G திட்டம்

July 2 , 2026 9 hrs 0 min 36 0
  • விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத ஊரக இயக்கத் (VB-G RAM G) திட்டத்தை 2026 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் செயல்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
  • ₹12,642 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு 60:40 என்ற விகிதத்தில் நிதியளிக்கப் படுகிறது என்பதுடன் இதில் மத்திய அரசு ₹7,585 கோடியும், மாநில அரசு ₹5,057 கோடியும் பங்களிக்கின்றன.
  • திறன்சாரா உடல் உழைப்பை மேற்கொள்ள விரும்பும் ஊரகக் குடும்பங்களுக்கு ஒரு நிதியாண்டில் 125 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்கு இத்திட்டம் உத்தரவாதம் அளிக்கிறது.
  • இத்திட்டம் நீர்ப் பாதுகாப்பு, ஊரக உள்கட்டமைப்பு, வாழ்வாதார சொத்துக்கள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான பணிகளில் கவனம் செலுத்துகிறது.
  • மாநில ஊரக வேலைவாய்ப்பு உறுதி சபை மற்றும் வழிகாட்டுதல் குழு ஆகியவை இத்திட்டத்தின் செயல்பாட்டை மேற்பார்வையிட்டு கண்காணிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்