வெளிநாட்டுத் தமிழ் ஆராய்ச்சியாளர்களை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு மாநில அரசானது, 'தமிழ் திறமையாளர்கள் திட்டத்தினை' அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, போட்டித்தன்மை வாய்ந்த சம்பளம், புத்தொழில் நிறுவன ஆராய்ச்சி மானியங்கள், இடமாற்ற ஆதரவு மற்றும் விரைவான நுழைவு இசைவுச் சீட்டு வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மாநில உயர் கல்விச் சபையானது (TANSCHE) பல துறைகளில் வெளிநாட்டுத் தமிழ் ஆராய்ச்சியாளர்களின் பதிவேட்டை பராமரிக்கும்.
இந்தத் திட்டமானது அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை நீண்ட கால மற்றும் குறுகிய கால ஒத்துழைப்பினை இலக்காகக் கொண்டுள்ளது.
சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அடிப்படை அறிவியல் மற்றும் கணிதத்திற்கான புதிய ஆராய்ச்சி மையங்களை நிறுவ அரசு 100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.