1620 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் தரையிறங்கிய டேனிஷ் கடற்படை கப்பலான 'எலிஃபண்ட்' (Elephant) கப்பலின் மாதிரி தரங்கம்பாடி கடல்சார் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கப் பட்டது.
தெற்காசியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்த அனுப்பப்பட்ட 2 போர்க் கப்பல்கள் மற்றும் 3 வணிகக் கப்பல்கள் அடங்கிய கடற்படையின் ஒரு பகுதியாக எலிஃபண்ட் கப்பல் இருந்தது.
இந்தக் கடற்பயணமானது அட்மிரல் ஓவ் கெட்டே தலைமையில் மேற்கொள்ளப்பட்டு, 1620 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று தரங்கம்பாடியை வந்தடைந்தது.
பின்னர் தஞ்சாவூர் நாயக்கருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட கெட்டே, தரங்கம்பாடியில் டான்ஸ்போர்க் கோட்டையை கட்டத் தொடங்கினார்.
இந்தக் கப்பல் மாதிரியானது டென்மார்க்கில் உள்ள கோகே கடல்சார் மாதிரி உருவாக்குநர்கள் சங்கத்தால் கட்டப்பட்டது.
இந்த மாதிரியானது டேனிஷ் தரங்கம்பாடி சங்கத்தால் தரங்கம்பாடி கடல்சார் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.