தரங்கா மலைக்குன்றுகள்-அம்பாஜி-அபு சாலை மற்றும் இரயில் பாதை
July 17 , 2022 1130 days 453 0
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது 116.65-கி.மீ. நீளம் கொண்ட தரங்கா மலைக்குன்றுகள்-அம்பாஜி-அபு என்ற சாலை இரயில் பாதையை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது.
இது இரண்டு மாநிலங்களையும் மூன்று வழிபாட்டுத் தலங்களையும் இணைக்கும்.
இந்த இரயில் பாதையானது அம்பாஜிக்கு எளிதான முறையில் பயணம் மேற்கொள்ளச் செய்வதற்கான ஒரு பாதையினை வழங்கும்.
தரங்கா மலையில் அஜித்நாத் (24 தீர்த்தங்கரர்களில் ஒருவர்) என்ற சமணக் கோவில் அமைந்துள்ளது.
இந்தப் பாதையானது ராஜஸ்தானில் உள்ள சிரோஹி மாவட்டம் மற்றும் குஜராத்தில் உள்ள சபர்கந்தா, மகேசனா & பனஸ்கந்தா ஆகிய மாவட்டங்கள் வழியாக செல்லும்.
இது தற்போதுள்ள அகமதாபாத்-அபு சாலை மற்றும் இரயில் பாதைக்கு ஒரு மாற்றுப் பாதையாகச் செயல்படும்.