தரிசு நிலங்களை மீட்டெடுத்தல்: இலக்கு திருத்தியமைக்கப்பட்டது
September 10 , 2019 2470 days 767 0
2030 ஆம் ஆண்டிற்குள் 26 மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலங்களைப் புனரமைப்பதை இந்தியா இலக்காகக் கொள்ளும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
முன்னதாக இந்த இலக்கு 21 மில்லியனாக இருந்தது. இப்போது அது திருத்தப்பட்டுள்ளது.
புது தில்லியில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலுக்கு எதிரான ஒப்பந்தத்தின் (United Nations Convention to Combat Desertification - UNCCD) உறுப்பு நாடுகளின் 14வது (COP 14) அமர்வின் போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
UNCCD COP 14 இல் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள்
சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப் படி, இந்தியாவில் மூன்று விலங்கு இனங்கள் பாலைவனமாக்கல் காரணமாக அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன.
அவை இந்தியச் சிறுத்தை, இளஞ் சிவப்பு தலை கொண்ட வாத்து மற்றும் கான மயில் ஆகும்.
பூச்சிக் கொல்லிகள், விவசாய நிலமாக மாற்றுவது, தொழில்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவை காரணமாக பாலைவனமாக்கல் ஏற்படுகின்றது.