TNPSC Thervupettagam

தர்பார் மகிளா சமன்வயா குழு

September 27 , 2025 13 hrs 0 min 9 0
  • கொல்கத்தாவில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் கூட்டமைப்பான தர்பார் மகிளா சமன்வயா குழு (DMSC), 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதன் 30 ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடியது.
  • உலக சுகாதார அமைப்பினால் தொடங்கப்பட்ட ஒருமித்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில், DMSC ஆனது ஆணுறைகளை விநியோகிப்பதற்காகவும் HIV/AIDS தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காகவும் 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • சோனகாச்சியில் சுமார் 12,000 பாலியல் தொழிலாளர்கள் வசிக்கின்றனர் என்பதோடு இந்த DMSC சங்கமானது மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பாலியல் தொழிலாளர்களையும் சேர்த்து 28,000க்கும் மேற்பட்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
  • குடும்ப அட்டைகள், ஆதார் அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பெறுவதற்கு எதிர்கொண்ட பாகுபாட்டை எதிர்த்துப் போராடிய இந்தச் சமூகம், நிதி சார் சுதந்திரத்திற்காக USHA கூட்டுறவு அமைப்பை உருவாக்கியுள்ளது.
  • பல பாலியல் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களை ஆதரிக்க தானாக முன்வந்து இதில் இணைகிறார்கள் என்கிற நிலையோடு அதே நேரத்தில் DMSC ஆனது 2,000க்கும் மேற்பட்ட கடத்தப் பட்ட பெண்களை ஆலோசனை மற்றும் மறுவாழ்வு மூலம் மீட்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்