சுவச் பாரத் திட்டமானது (கிராமின்) நாடெங்கிலும் உள்ள கிராமங்களின் திறந்த வெளிக் கழிப்பிடமில்லா நிலைப்பாட்டின் நிலைத் தன்மைக்காக “தர்வாசா குழு - பகுதி 2” என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரமானது உலக வங்கியினால் ஆதரிக்கப்படுகிறது. மேலும் இந்தப் பிரச்சாரம் தொடங்கிய பின்பு நாடெங்கிலும் இது செயல்படுத்தப்படும்.
இந்தப் பிரச்சாரமானது மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சகத்தினால் ஏற்படுத்தப்பட்டது.
இது சமூக மற்றும் கிராம நிலைகளில் நடைமுறை மாற்றம் மற்றும் கழிப்பறைகளின் பயன்பாடுகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மீது கவனத்தைச் செலுத்துகிறது.