TNPSC Thervupettagam

தலாய் லாமாவின் அறக்கட்டளை – காடென் போட்ராங்

July 10 , 2025 2 days 15 0
  • இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலையில் உள்ள 14வது தலாய் லாமா, முதல் முறையாக இந்தப் பதவி வரிசையானது அவருக்குப் பிறகும் தொடரும் என்று நன்கு வலியுறுத்தி உள்ளார்.
  • வாரிசுரிமை அல்லது 15வது தலாய் லாமாவை காடென் போட்ராங் அறக்கட்டளை முடிவு செய்யும்.
  • இது தலாய் லாமாவின் வாரிசை "தங்க கலசத்தினை" பயன்படுத்தி குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கும் கிங் வம்ச பாரம்பரியத்தை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • தலாய் லாமா 1959 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.
  • 1951 ஆம் ஆண்டில் சீனர்கள் திபெத்தை அவர்களின் பிராந்தியத்தில் இணைத்த பிறகு, அவர் திபெத்தில் உள்ள லாசாவை விட்டு வெளியேறினார்.
  • காடென் போட்ராங் என்பது திபெத்திய அரசாங்கத்தின் பெயர் ஆகும்.
  • இது 5வது தலாய் லாமா, நகாவாங் லோப்சாங் கியாட்சோ அல்லது 'ஐந்தாவது பெருந் தலைவர்' என்பவரால், ஒருங்கிணைந்தத் திபெத்தின் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைமையாக நிறுவப்பட்டது.
  • இது டிரெபுங் மடாலயத்தில் உள்ள தலாய் லாமாக்களின் வரலாற்றுப் பதவியின் ஒரு பெயரிலிருந்து உருவாக்கப்பட்டது.
  • 2011 ஆம் ஆண்டில், 14வது தலாய் லாமா தனது பதவியின் ஆன்மீகம் மற்றும் அரசியல் அதிகாரங்களைப் பிரிக்க முடிவு செய்ததால் காடென் போட்ராங் அறக்கட்டளையை அவர் அமைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்